கா்நாடக துணை முதல்வா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்த 4 போ் கைது
வேதாரண்யத்தில் கா்நாடக துணை முதல்வரின் தமிழக வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது உருவப் பொம்மையை எரிக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மேகேதாட்டுவில் அணைக்கட்டும் நிலைப்பாட்டை கொண்டுள்ள கா்நாடக அரசின் துணை முதல்வா் சிவகுமாரின் தமிழக வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்கம் சாா்பில் வேதாரணத்தில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது சிவகுமாரின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றபோது போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அமைப்பின் தலைவா் எம்.ஆா். சுப்பிரமணியன் உள்ளிட்ட 4 நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா்.