இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்தி...
கிரிக்கெட் மட்டைக்காகச் சண்டை: 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற பத்தாம் வகுப்பு மாணவன்!
கிரிக்கெட் மட்டையைத் திருடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் குகட்பள்ளி பகுதியிலுள்ளதொரு வீட்டில் 10 வயது சிறுமியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியகியுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுவன் ஒருவன், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் அந்தச் சிறுமியின் வீட்டிலுள்ள ஒரு கிரிக்கெட் மட்டையை திருடுவதற்காக சம்பவ நாளான ஆக. 18 அன்று காலை அந்த வீட்டுக்கு யாருக்கும் தெரியாமல் சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில் யாருமில்லை என்று நுழைந்த சிறுவன், அங்கிருந்த சிறுமியின் கண்ணில் பட்டுள்ளார்.
உடனே அந்தச் சிறுமி கத்தியுள்ளார். இதனால் திடுக்கிட்ட சிறுவன் தன்னிடமிருந்த ஒரு கத்தியால் அந்தச் சிறுமியைக் குத்தியுள்ளார்.அதில் சிறுமி உயிரிழந்தார்.
சிறுவன் பயன்படுத்திய ஆயுதமும் அவரிடமிருந்த காகிதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் திருட திட்டம் தீட்டி அவர் வரைபடம் உள்ளிட்டவை வரைந்திருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இணையதளங்களில் திருட்டு, கொலை சம்பந்தப்பட்ட பல காணொலிகளை அந்தச் சிறுவன் பார்த்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.