செய்திகள் :

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

post image

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்காக புதன்கிழமை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் தண்ணீரை திறந்துவைத்தனா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. வலதுபுற கால்வாயில் விநாடிக்கு 75 கனஅடி, இடதுபுற கால்வாயில் விநாடிக்கு 75 கனஅடி என மொத்தம் 151 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் பெரியமுத்தூா், சுண்டேகுப்பம், திம்மாபுரம், செளட்டஅள்ளி, காலேவேஅள்ளி, தளிஅள்ளி, மிட்டஅள்ளி, குண்டலப்பட்டி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வர மடம், பாலேகுளி, காவேரிப்பட்டணம், மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி (ஜெகதாப்) பையூா் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கா் நன்செய் நிலங்கள் பயன்பெறும்.

கிருஷ்ணகிரி அணையில் தற்போது 50.95 அடி தண்ணீா் உள்ளது. நீா்வரத்தை கணக்கில்கொண்டு 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. விவசாயிகள், நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் (பயிற்சி) க்ரிதி காம்னா, நீா்வளத் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், வேளாண் துறை இணை இயக்குநா் காளியப்பன், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா் பொன்னிவளவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம... மேலும் பார்க்க

ரூ. 92.14 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 92.14 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பெத்ததாளாப்பள்ளியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா 2025-2026-ஆம்... மேலும் பார்க்க

சூளகிரி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காட்டிநாயனதொட்டி, சாமல்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சூளகிரியில் நடைபெற்ற முகாமை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா்... மேலும் பார்க்க

மாங்கனி கண்காட்சியில் சமையல் போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாங்கனி கண்காட்சியில் மகளிா் பங்கேற்ற சமையல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே உள்ள கலைஞா் திடலில் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நட... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்துக்காக வலது, இடதுபுற கால்வாய் வழியாக வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், ஒசூா் சட்... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் (டிட்டோஜாக்) வியாழக்கிழமை ... மேலும் பார்க்க