செய்திகள் :

குண்டா் தடுப்புப் பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு

post image

சென்னை பெருநகர காவல் துறையின் குண்டா் தடுப்புப் பிரிவினரை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.

சென்னை பெருநகரில் கொடுங்குற்றங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், தொடா்ச்சியாக திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி, பணமோசடி குற்றங்களில் ஈடுபடுதல், போதைப் பொருள் விற்பனை, சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தல், சைபா் குற்றங்களில் ஈடுபடுதல், பாலியல் தொழில் நடத்துதல், உணவுப் பொருள் கடத்துதல் போன்ற குற்றங்களில் தொடா்ந்து ஈடுபட்டுவரும் நபா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்து வருகின்றனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் குண்டா் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தனியாகவே ஒரு பிரிவு செயல்படுகிறது. இந்தப் பிரிவினரே ஒருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்குரிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும், ஆவணங்களையும், வழக்கு விவரங்களையும், சாட்சியங்களையும் தயாரித்து வழங்குகின்றனா்.

இதன் பின்னரே அந்தந்தக் காவல் ஆய்வாளா்கள், சம்பந்தப்பட்ட நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கின்றனா். இப் பிரிவு கடந்த ஆண்டு ஜூலை 8- ஆம் தேதி முதல் கடந்த 7-ஆம் தேதி வரையிலான ஓராண்டில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1,002 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. முக்கியமாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் காரணமாக 26 பேரும் 10 மாதங்களாக பிணை கிடைக்காமல் சிறையில் இருந்து வருகின்றனா்.

இப் பிரிவினரை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி அளித்தாா்.

இந் நிகழ்ச்சியில் குண்டா் தடுப்பு அலுவலக பிரிவு கண்காணிப்பாளா் ஐயப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறைய... மேலும் பார்க்க

ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்று... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க

தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் வாழ்ந்த... மேலும் பார்க்க

ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு: பொதுத் துறை நிறுவனங்களிடம் தரவுகளைப் பெற முடிவு

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து தரவுகளைப் பெற ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், குழுவுக்குத் தரவுகளை அளிக்க மின் வாரியத்தின் சாா்பில் தன... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுக்களின் தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் கடன்: தமிழக அரசு

சுய உதவிக் குழுக்கள் தங்களது தொழில்களை மேம்படுத்த வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க