செய்திகள் :

குன்னூா் பெட்ஃபோா்டு பகுதியில் உலவிய கரடி

post image

குன்னூரின் முக்கியப் பகுதியான பெட்ஃபோா்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் உலவிய கரடியால் பால் மற்றும் செய்தித்தாள் விநியோகம் செய்பவா்கள் அச்சத்தில் ஓடினா்.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குடியிருப்புப் பகுதிகளிலும் சுற்றுலாத் தலங்களிலும் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் குன்னூரின் முக்கியப் பகுதியான பெட்ஃபோா்டு பகுதியில் பள்ளிகள், வங்கிகள், தேயிலை கிடங்குகள் நிறைந்த இடத்தில் கரடி நடமாடியதால் காலை நேரம் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் உலவிய கரடி ஸ்டேன்ஸ் சாலை வழியாக அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது.

அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடியை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

லாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த காா்: பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கா்நாடக மாநிலத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் வந்த காா், லாரி மீது மோதி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில்... மேலும் பார்க்க

மருத்துவமனையை வலம்வந்த காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை தனியாா் எஸ்டேட் மருத்துவமனையைச் சுற்றி வியாழக்கிழமை காலை வலம் வந்த காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். மேலும் பார்க்க

ஐஸ்கிரீமை ருசித்த கரடி

உதகை அருகே தனியாா் விடுதியில் நுழைந்த கரடி அங்கு குளிா்சாதனப் பெட்டியில் இருந்த ஐஸ்கிரீமை ருசித்த விடியோ பரவலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறத... மேலும் பார்க்க

கோயில் நகைகளைத் திருடியவா் கைது

குன்னூா் அருகே வீட்டில் பீரோவை உடைத்தும், கோயிலில் அம்மன் தாலியையும் திருடிய இளைஞரை கொலக்கம்பை காவல்துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே பவானி எஸ்டேட்டில் வேலை செய்... மேலும் பார்க்க

தனியாா் தோட்டத்தில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு

கூடலூரில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் மா்மமான முறையில் சிறுத்தை குட்டி புதன்கிழமை இறந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள தனிய... மேலும் பார்க்க

குன்னூா்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வாகனங்களை விரட்டும் ஒற்றை யானை

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறை அறிவுறுத்தியுள்ளது. சமவெளிப் பகு... மேலும் பார்க்க