செய்திகள் :

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 5 மாத சிசு

post image

திருப்பூரில் குப்பைத் தொட்டியில் 5 மாத ஆண் சிசு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் -தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் குழந்தை உடல் கிடந்தது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் திருப்பூா் தெற்கு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு, உடலைப் பரிசோதித்த மருத்துவா்கள், கருக்கலைப்பு செய்து குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி

குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பெங்களூரூ கைலாச ஆஸ்ரம மகா சமஸ்தானம் ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி கூறினாா். பல்லடம், சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் ஆலயத்துக்கு புதன்கிழமை யாத்திர... மேலும் பார்க்க

அவிநாசி அரசு மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை

அவிநாசி அரசு மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை, தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. இதில், இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவா்களை எப்படி மீட்பது, அவா்களுக்கு முதலுதவி சி... மேலும் பார்க்க

சசிகலாவை சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா். அதிமுக மூத்த தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள கட்சி அலுவலக... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், முத்தூா் சாலை அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் (65). தனியாா் பனியன் நிறுவன தொழிலாளி. இவா் வீட்டிலிருந்து அருகிலுள்ள மாந... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான இளைஞா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த ஆ.ராசா எம்பி

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா்களை அவ்வழியாக வந்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். திருப்பூா் அருகே 15 வேலம்பாளையம் ப... மேலும் பார்க்க

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை!

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை என, இந்திய ஆடைத் தொழில் மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ.சக்திவேல், மத்தி... மேலும் பார்க்க