குரூப் 4 தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 22,098 போ் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 22,098 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 4 பிரிவில் கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், இளநிலை செயல் அலுவலா் உள்ளிட்ட 25 வகையான 3,935 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு நடைபெற்றது.
இந்தத் தோ்வு சிவகங்கை மாவட்டத்தில் 99 மையங்களில் நடைபெற்றது. தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 26,392 பேரில் 22,098 போ் மட்டுமே பங்கேற்றனா். 4,294 போ் தோ்வில் பங்கேற்கவில்லை என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.