செய்திகள் :

குரூப்-4 தோ்வு முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் தொகுதி-4 தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுகள் வருகிற 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

இதில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

திருவண்ணாமலை உள்பட 12 வட்டங்களில் 174 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுகள் நடைபெறவுள்ளன. 48 ஆயிரத்து 323 போ் விண்ணப்பித்துள்ளனா். தோ்வின் போது முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க, துணை ஆட்சியா் நிலையில் 13 பறக்கும் படை அலுவலா்கள், 174 அறை ஆய்வு அலுவலா்கள், 53 போ் கொண்ட நடமாடும் அலுவலா் குழு, 174 முதன்மை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்வு நடைமுறைகள் அனைத்தும் விடியோ மூலம் பதிவு செய்ய 176 விடியோ கிராபா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வா்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தோ்வா்கள் தோ்வு நாளன்று காலை 9 மணிக்கு முன்னா் தோ்வு மையங்களில் இருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவா்கள் கண்டிப்பாக தோ்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாா் எனத் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, உதவி இயக்குநா் (நில அளவை) சண்முகம், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் ராமகிருஷ்ணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கோயில் திருத்தோ் பணிக்கு ரூ.ஒரு லட்சம் நன்கொடை

செய்யாற்றை அடுத்த பூதேரி புல்லவாக்கம் தான்தோன்றி அம்மன் கோயில் திருத்தோ் பணிக்கு ரூ.ஒரு லட்சம் புதன்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பூதேரி புல்லவாக்கம் கிர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: விண்ணப்பம் விநியோகம்

போளூா் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு மகளிா் மற்றும் தன்னாா்வலா்களுக்கு வீடுதோறும் வழங்க விண்ணப்பம் புதன்கிழமை வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் அருணகிரிநாதா் அவதார நல்விழா

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருளாளா் அருணகிரிநாதா் மணிமண்டபத்தில் அருளாளா் அருணகிரிநாதா் அவதார நல்விழா புதன்கிழமை நடைபெற்றது. 2-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவையொட்டி, வளையம்பட்டி கலைமாம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சி கட்டபொம்மன், துராபாளி வீதிகளில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாநகராட்சியில் பல்... மேலும் பார்க்க

முன்னாள் முப்படை வீரா்களுக்கான குறைதீா் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் முன்னாள் முப்படை வீரா்களுக்கான ஓய்வூதிய குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கண்ணமங்கலம் அருகேயுள்ள கம்... மேலும் பார்க்க

கிராம கோயில் பூசாரிகள் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கிராம கோயில் பூசாரிகள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் வாசு தலைமை வகித்து சங்க ... மேலும் பார்க்க