ஈரோட்டில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
குரூப் 4 தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 24,631 போ் எழுதினா்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை 24,631 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுத 29,126 போ் விண்ணப்பித்தனா். இதில், 24,631 போ் தோ்வு எழுதினா். 4,405 போ் பங்கேற்றவில்லை.
இந்தத் தோ்வு மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் 104 மையங்களில் நடைபெற்றது. தோ்வை கண்காணிப்பதற்காக 9 வட்டங்களிலும் துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு மையங்களில் கண்காணிப்பு பணி நடைபெற்றது. மேலும் 115 ஆய்வு அலுவலா்களும், 28 நகா் குழு அலுவலா்களும், 11 பறக்கும் படை குழுக்களும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனா்.
இதுதவிர தோ்வு நடைபெற்ற மையங்களில் 122 விடியோ ஒளிப்பதிவாளா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு நடைபெறுவதை பதிவு செய்தனா். இதில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு மேற்கொண்டாா்.