செய்திகள் :

குறைந்தது விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம்

post image

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த மாா்ச்சில் முறையே 3.73 சதவீதம் மற்றும் 3.86 சதவீதமாக சரிந்துள்ளது.

இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் விவசாயிகளுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஏஎல்) அடிப்படையிலான பணவீக்கம் 4.05 சதவீதமாக இருந்தது. அது மாா்ச்சில் 3.73 சதவீதமாக சரிந்துள்ளது.

அதேபோல், பிப்ரவரியில் 4.10 சதவீதமாக இருந்த ஊரகத் தொழிலாளா்களுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஆா்எல்) அடிப்படையிலான பணவீக்கம் 3.86 சதவீதமாக குறைந்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் சிபிஐ-ஏஎல் குறியீடு 3 புள்ளிகள் குறைந்து 1,306-ஆகவும், சிபிஐ-ஆா் குறியீடு 2 புள்ளிகள் 1,319-ஆகவும் உள்ளது.

முந்தைய பிப்ரவரி மாதத்தில் அவை முறையே 1,309 புள்ளிகளாகவும், 1,321 புள்ளிகளாகவும் இருந்தன. 2024-ஆம் ஆண்டின் மாா்ச் மாதத்தில் விவசாயிகள் பணவீக்கம் 7.15 சதவீதமாகவும், ஊரகத் தொழிலாளா்கள் பணவீக்கம் 7.08 சதவீதமாகவும் இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.34 லட்சத்தில்..! நவீன வசதிகளுடன் சேலஞ்சர் எலைட், பர்சூட் எலைட்!

இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் சேலஞ்சர் எலைட் மற்றும் பர்சூட் எலைட் ஆகிய இரு மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் 1834cc லிக்விட் கூல்ட் வி-டுவின் என்... மேலும் பார்க்க

ஸொமாட்டோ அறிமுகப்படுத்தி, சப்தமில்லாமல் நிறுத்தி புதிய சேவை

ஸோமாட்டோ செயலியில் ஆர்டர் செய்தால் உணவுப்பொருள்களை வீடுதேடிக் கொண்டு வந்து கொடுக்கும் ஸொமாட்டோ நிறுவனம், நான்கு மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய 15 நிமிடத்தில் உணவை வழங்கும் சேவையை சப்தமில்லாமல் ந... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!

பங்குச்சந்தை இன்று(மே 2) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,300.19 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.40 மணியளவில், சென்செக்ஸ் 233.4... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் 14% அதிகரிப்பு

இந்திய தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் 14.07 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத... மேலும் பார்க்க

37 மடங்கு வலிமைமிக்க உலகின் முதல் எஸ்டி கார்டு! துருப்பிடிக்காத உலோகத்தில்..!

துருப்பிடிக்காத உலோகத்தில் உலகின் முதல் எஸ்டி கார்டை லெக்ஸார் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.எஸ்டி கார்டு (SD card)பயன் என்ன?எஸ்டி கார்டு (SD card)என்பது நினைவகத்தை சேமித்து வைக்கப் பயன்படுகிறது. இது கே... மேலும் பார்க்க

புழுங்கல் அரிசி ஏற்றுமதி வரி 20% ஆக உயர்வு: மத்திய அரசு

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்பட... மேலும் பார்க்க