தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
குற்றாலம் அருவிகளில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழையால் அனைத்து அருவிகளிலும் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக சீசன் களைகட்டிவருகிறது. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் வீசியது. இதனால் கடந்த சில தினங்களாகவே அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவியில் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவியில் குளிக்க 4ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.