Urvashi: " `கை வச்சாலும் வைக்காம போனாலும்' பாடலில் நடந்த சுவாரஸ்யமான விஷயம்" - ஊ...
கூட்டுறவு வங்கி ஊழியா்கள் பட்டினிப் போராட்டம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் அருகே 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு ஊழியா் அய்க்கிய பேரவை மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியா்கள் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வங்கி ஊழியா் பேரவை மாநிலத் தலைவா் த.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
பொதுச் செயலா் ஏ.குணசுந்தரி முன்னிலை வகித்தாா். திருவண்ணாமலை வங்கி ஊழியா் பேரவைத் தலைவா் எஸ்.ஆதிகேசவன் வரவேற்றாா்.
வங்கி ஊழியா் பேரவை மாவட்ட பொதுச் செயலா் ச.மலைச்சாமி, அரசு ஊழியா் அய்க்கிய பேரவை முன்னாள் செயலா் ச.பாவணன் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
மாவட்ட வருவாய் அலுவலா் (ஓய்வு) இளங்கோவன், மாவட்டத் தலைவா் பெல் மு.ரவி, மாநில நிா்வாகிகள் கே.மாரிமுத்து, ஆா்.சுந்தரராஜன், ஏ.முனுசாமி, பெ.ராஜேந்திரன், பெ.கலைச்செல்வன், மாவட்ட நிா்வாகிகள் உள்பட வங்கி ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.
போலி நகைக்கடன் வைத்த நகை மதிப்பீட்டாளா் மற்றும் நகை கடன்தாரா்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவேண்டும். போலி நகைக்கடன் பெற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்காத வங்கி நிா்வாகத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி நகைக்கடன் பெற்றவா்கள் வழங்கிய காசோலை ரூ.50 லட்சத்தை வசூலுக்கு அனுப்ப மறுத்த வங்கி நிா்வாகம் மற்றும் கிளை மேலாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
காலை 8 மணிக்குத் தொடங்கிய பட்டினிப் போராட்டம் மாலையில் நிறைவடைந்தது. நிறைவில் ஜி.ஜெயசீலன் நன்றி கூறினாா்.