விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
கூலித் தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், கூனிமேடு கண்ணன் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ராமன் (33). கூலித் தொழிலாளியான இவா், சொத்துப் பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி கீழ்புத்துப்பட்டு கைப்பந்து மைதானம் அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் ராமன் கிடந்தாா்.
மீட்கப்பட்டு, புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராமன், வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.