ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
"’கூலி’ படம் இவ்வளவு அழகாக உருவானதற்கு காரணம்...’ - ரஜினி குறித்து லோகேஷ் கனகராஜ் உருக்கமாக பதிவு!
ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் ரஜினிகாந்துக்கு உருக்கமான நன்றியையும், அவரது 50 ஆண்டு திரைப்பயணத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் உணர்வு பூர்வமான பதிவு
லோகேஷ் கனகராஜ் அந்த பதிவில் தெரிவித்ததாவது, ``‘கூலி’ படம் எனது திரைப்பயணத்தில் எப்போதும் சிறப்பான இடத்தைப் பிடிக்கும். இந்தப் படம் இவ்வளவு அழகாக உருவானதற்கு காரணம், தலைவர் ரஜினிகாந்த் சார் நீங்கள் தான். உங்களுடன் படப்பிடிப்பில் மற்றும் வெளியில் பகிர்ந்த உரையாடல்கள், இந்த வாய்ப்பு இவை எல்லாம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள். உங்களது 50 ஆண்டு திரைப்பயணம் எங்களை எல்லாம் காதலிக்கவும், கற்றுக்கொள்ளவும், வளரவும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. நன்றி, தலைவா!” என்று லோகேஷ் தனது பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் 50 ஆண்டு திரைப்பயணம்
‘கூலி’ படத்தின் வெளியீட்டுடன், ரஜினிகாந்த் தனது 50 ஆண்டு திரைப்பயணத்தைக் கொண்டாடுகிறார். 1975ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான ரஜினி, தனது தனித்துவமான நடிப்பு, ஸ்டைல் மூலம் உலகளவில் மில்லியன் கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். ‘கூலி’ திரைப்படம் ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகியுள்ள ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஆகும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.