பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!
கெங்கவல்லியில் 35 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.
கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1988 - 1990 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணித, அறிவியல், கலை, தெழில்பிரிவு குரூப்களில் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் 35 வருடங்களுக்குப்பிறகு நடந்த சந்திப்பு, பள்ளியில் நடைபெற்றது. இதற்கு ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார்.
ஆத்தூர் துணிக்கடை அதிபர் எல்.செந்தில்குமார், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் ராஜாராம் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் ஜோ. அருள்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக மாணவர்கள் அன்றும், இன்றும் குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் பி.அமுதா, தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியை க.உமா உள்பட 150 பேருக்கு சிறந்த மாணவர் மற்றும் சிறந்த மாணவி விருதும், தற்போதைய கெங்கவல்லி தலைமையாசிரியர்கள் (ஆண்கள் பள்ளி) சாமிவேல், மகளிர் பள்ளி வசந்தாகுமாரி, மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பயிற்றுவித்த 20 ஆசிரியர்கள் ஆகியோருக்கு சிறந்த நல்லாசான் விருதும், சேலம் டயட் விரிவுரையாளர் கலைவாணனுக்கு சிறந்த கல்வியாளர் விருது, கெங்கவல்லி ஆர்சி பள்ளி தலைமையாசிரியர் ஜாக்குலின் புஷ்பராணி, கெங்கவல்லி தனியார் மருத்துவர் மார்ட்டினா ஆகியோருக்கு சிறந்த சமூகசேவகி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து பழைய கால நினைவுகளை நினைவூட்டி மகிழ்ந்தனர். கெங்கவல்லி அரசு மகளிர் பள்ளிக்கு பிரிண்டரும், கெங்கவல்லி அரசு ஆண்கள் பள்ளிக்கு சுழல்கோப்பை, யுபிஎஸ் மற்றும் பேட்டரி ஆகியவைகளை அன்பளிப்பாக வழங்கினர். பா.மனோன்மணி நன்றி கூறினார்.
இதையும் படிக்க | சந்திரகிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு