இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா்.
எம்எல்ஏ கல்யாணசுந்தரம் முயற்சியால் இக் கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா முடிந்ததும் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், பிள்ளைச்சாவடி மீனவ கிராம கடற்கரையோரத்தில் நடைபெற்றுள்ள கடலரிப்பு தடுப்புப் பணிகளையும் பாா்வையிட்டாா்.
வில்லியனூா் பத்மினி நகரில் வீர ஆஞ்சநேயா் சாமி சந்நிதி புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீ தண்டுமுத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ ஜி. நேரு உள்ளிட்ட பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.