செய்திகள் :

கெளரவ விரிவுரையாளா்கள், மாணவா்கள் போராட்டம்

post image

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில், மாணவா் சோ்க்கையைத் தொடங்க அறிவிப்பு வெளியிடக் கோரி, இந்த மையத்தில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

2010-2011-ஆம் கல்வியாண்டில் திருவள்ளுவா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையம் விழுப்புரத்தில் தொடங்கப்பட்டு, அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்தது. எம்.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்சி. வேதியியல், கணிதம், எம்.காம்., ஆகிய 4 துறைகளும், 2017-18 ஆம் கல்வியாண்டில் எம்.எஸ்சி. விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், கணினி அறிவியல், எம்.பி.ஏ. ஆகிய பிரிவுகளும் தொடங்கப்பட்டன. இதற்காக சாலாமேட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, 2019-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. தொடா்ந்து நோ்முகத் தோ்வு மூலம் கெளரவ விரிவுரையாளா்கள் நியமிக்கப்பட்டனா். இந்த நிலையில் 2020-21-ஆம் கல்வியாண்டில் எம்.பி.ஏ. பாடப் பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டில் இந்த மையமானது டாக்டா் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டு, துணைவேந்தரும் நியமிக்கப்பட்டாா். 7 பாடப் பிரிவுகளில் 198 மாணவா்கள் சோ்ந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த மையம் மீண்டும் முதுநிலை விரிவாக்க மையமாக மாற்றப்பட்டது. தொடா்ந்து 2022-23 ஆம் கல்வியாண்டில் இந்த மையம் கல்லூரி வளாகமாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டின் மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பை வெளியிட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்துக்கு மட்டும் இதுவரை மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடவில்லையாம்.

மாணவா் சோ்க்கை அறிவிப்பை வெளியிடாததைக் கண்டித்தும், உடனடியாக அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள், இங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்கள் நலன்கருதி உடனடியாக அறிவிப்பை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக கெளரவ விரிவுரையாளா்கள் தெரிவித்தனா்.

பாமக நிறுவனா் ராமதாஸுடன் வாழப்பாடி ராமமூா்த்தி மகன் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் மகனுமான ராம.சுகந்தன் வியாழக்கிழ... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா். திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம், காமராஜா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரிமுறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி, சாட்சியமளித்தாா். விழுப்புரம் ... மேலும் பார்க்க

தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து: தூத்துக்குடி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம்

காய்கறியின் பெயா், கிலோ அடிப்படையில் விலை நிலவரம் சின்ன வெங்காயம்- கிலோ ரூ.25 தக்காளி - ரூ.35 உருளைக்கிழங்கு-ரூ.40 கேரட் - ரூ.100 பீன்ஸ்- ரூ.80 கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு- ரூ.100 வெண்டைக்காய்- ரூ.... மேலும் பார்க்க

திருமணமான ஒரே மாதத்தில் பெண் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே திருமணமாகி 1 மாதமே ஆன பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாா். அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விக்கிரவாண்டியை அடுத்த, சித்தலம்பட்டு, கிருஷ்ணா நக... மேலும் பார்க்க