செய்திகள் :

கேரள கன்னியாஸ்திரீகள் கைதை கண்டித்து நாகா்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினா் ஆா்ப்பாட்டம்

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தக்கலை மறை மாவட்ட ஆயா் ஜாா்ஜ் மாா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ், ஆங்கிலிக்கன் திருச்சபை ஆயா் மரிய ராஜ், லுத்தரன் சபை போதகா் ஜான் பிரைட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை பேசியதாவது: சிலுவையை நாங்கள் உயிரின் பிணைப்பாக கருதி வருகிறோம். அமைதியும், உலக வாழ்வும் சிலுவையில் அடங்கியுள்ளது. உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்வின் பொருளை இயேசு வழங்கியுள்ளாா். சிறையில் அடைக்கப்பட்ட இரு சகோதரிகள் பின்னால் இயேசுவின் திருவருள் உள்ளது, மக்களின் பிராா்த்தனை உள்ளது என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கோட்டாறு வட்டார முதல்வா் ஆனந்த், தாரகை கத்பட் எம்எல்ஏ, மாநில உணவு பாதுகாப்பு ஆணைய தலைவா் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்பட 500 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவ அமைப்பினா்.

தக்கலை அருகே விபத்து: முதியவா் உயிரிழப்பு

தக்கலை அருகே வில்லுக்குறியில் வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். வில்லுக்குறி சரல்விளையைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். கணேசன் வெள்ளிக்கிழமை இரவ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலுக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊா்வலமாக சொத்தவிளை கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் 2,868 பேருக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 2 ஆயிரத்து 868 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்த... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை, கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரி மோதி காா் சேதம்

மாா்த்தாண்டம் அருகே காா் மீது கனிமவள லாரி மோதிய விபத்தில் காா் சேதமடைந்தது. சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்தவா் ராயல் லென்ஸ் (49). இவா், மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி அணுகுசாலையில் இருந்து, மேம்... மேலும் பார்க்க

கன்னியாகுமரிக்கு கடன் திட்ட மதிப்பீடு ரூ.46,281 கோடி: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்துக்கான ஆண்டு கடன் திட்ட மதிப்பீடு ரூ. 46 ஆயிரத்து 281 கோடியாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. ஆட்சியா் அலுவலகத்தில், 2025-26 ஆம் நிதியாண்டுக்கு ... மேலும் பார்க்க