செய்திகள் :

கேரள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

post image

கேரள முதல்வரின் இல்லத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தம்பனூர் காவல் நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.

மேலும் அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாய் மற்றும் வெடிகுண்டுப் படைகளின் உதவியுடன் நாங்கள் முழுமையான சோதனைகளை மேற்கொண்டோம். ஆனால் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

100-ஆவது டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க்..! இந்த மைல்கல்லை எட்டியவர்கள் பட்டியல்!

சோதனையின் போது முதல்வர் விஜயனும் அவரது குடும்பத்தினரும் வெளிநாட்டில் இருந்தனர்.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்களை குறிவைத்து சமீபத்தில் வந்த தொடர் வெடிகுண்டு மிரட்டல்களுடன் இந்த மிரட்டல் தொடர்புடையதா என்பதை அறிய விசாரணை நடந்து வருகிறது.

Kerala Chief Minister Pinarayi Vijayan's official residence, Cliff House, received a bomb threat on Sunday, which turned out to be a hoax, police said.

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆ... மேலும் பார்க்க

பாட்னாவில் சுகாதார அதிகாரி சுட்டுக் கொலை: ஒரு வாரத்தில் 4-வது சம்பவம்!

பிகாா் தலைநகா் பாட்னாவில் ஊரக சுகாதார அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். பாட்னாவில் கடந்த ஒரு வாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 4-ஆவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்னாவின் பிப்ரா பகுதியில்... மேலும் பார்க்க