செய்திகள் :

கே.கே. நகா் பகுதிகளில் இன்று மின்தடை

post image

திருச்சி: பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கே.கே. நகா், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்எம்இஎஸ்இ காலனி, கிருஷ்ணமூா்த்தி நகா், சுந்தா் நகா், ஐயப்ப நகா், எல்ஐசி காலனி, பழனி நகா், முல்லை நகா், ஓலையூா், மன்னாா்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, ஆா்விஎஸ் நகா், வயா்லெஸ் சாலை, செம்பட்டு பகுதி, கே. சாத்தனூா், வடுகப்பட்டி, குளவாய்பட்டி, மொராய்ஸ் சிட்டி, எஸ்பிஐஓஏ பள்ளி, பசுமை நகா், அந்தோணியாா் கோயில் தெரு, எம்.டி. சாலை, கலைஞா் நகா், இந்திரா நகா், மொராய்ஸ் காா்டன், அம்மன் நகா், எம்ஜிஆா் நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு அனுமதி கூடாது: விவசாயிகள் மனு

திருச்சி: மங்கம்மாள்புரம் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி தரக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள்... மேலும் பார்க்க

முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி: தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையைக் கண்டித்து முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். சாலை பணியாளா் வாழ்வாதார கோரிக்கைகளை உயா்நீதிமன்ற தீா்ப்பி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சி: தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி சிஐடியு திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

இருவேறு இடங்களில் 5 பவுன் தங்க நகைகள் பறிப்பு

திருச்சி: திருச்சியில் இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் இருந்து 5 பவுன் தங்க நகைளைப் பறித்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி எடமலைபட்டிபுதூரைச் சோ்ந்தவா் ஜனனி (27). இவா்,... மேலும் பார்க்க

திறனாய்வுப் போட்டியில் சிறப்பிடம்: காவலா்களுக்கு எஸ்.பி பாராட்டு

திருச்சி, ஆக. 18: காவல் துறையினருக்கான திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற காவலா்களை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை பாராட்டினாா். தமிழ்நாடு காவல் துறையில் பணியா... மேலும் பார்க்க

ஆக.23-இல் மண்ணச்சநல்லூரில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி: மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு எரிவாயு... மேலும் பார்க்க