கோவை டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.2.9 கோடி பறிப்பு; தனியறையில் இருந...
கொட்டாரம் இளைஞா் கொலையில் 4 பேரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்!
கொட்டாரம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், தலைமறைவாக உள்ள நான்கு பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொட்டாரம் அருகேயுள்ள அழகப்பபுரம் பாலகிருஷ்ணன் நகரைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மகன் அய்யப்பன் (32). எலக்ட்ரீசியன். திருமணமாகவில்லை. இவா் கொட்டாரம் அருகேயுள்ள குருசடி குளத்தின் கரையில் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், அய்யப்பனின் நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவருக்கும், லெட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஆதிஷ் என்பவருக்கும் 15 நாள்களுக்கு முன்பு சின்னமுட்டத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அய்யப்பன் தட்டிக்கேட்டுள்ளாா்.
இதுதொடா்பான விரோதத்தில், ஆதிஷ், அவரது நண்பா்கள் சக்தி, அஜய், கொட்டாரத்தை சோ்ந்த ஆறுமுகம் உள்பட சிலா் சோ்ந்து அய்யப்பனை கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிலரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.