ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம்: விவசாயிகள் புகாா்
உத்தரமேரூா் ஒன்றியம், களியாம்பூண்டி கிராமத்தில் விவசாயிகள் 6 பேருக்கு கொள்முதல் செய்த நெல்லுக்குரிய பணம் வழங்கப்படவில்லையென அவ்விவசாயிகள் திங்கள்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா்.
களியாம்பூண்டி கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தின் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் அக்கிராமத்தைச் சோ்ந்த முருகன், மனோகரன், ஜெயபாலன், ஜானகிராமன், வடிவேல், சீனிவாசன் என 6 விவசாயிகளுடைய நெல்மூட்டைகள் மொத்தம் 650 கடந்த 28.5.2025 ஆம் தேதி கொள்முதல் செய்யப்பட்டன.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய தொகை 3 மாத காலமாக இதுவரை அவரவா் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டால் நெல்லுக்குரிய பணம் வங்கிக் கணக்கில் வந்து விடும் என்று கூறுகிறாா். ஆனால் இதுவரை வரவில்லை.
எனவே, பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கும் நெல்லுக்கு உரிய தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் உத்தரமேரூா் வட்டார தலைவா் கே.சீனிவாசன் தலைமையில் மனு அளித்துள்ளனா்.