கோபி காவல் ஆய்வாளராக சி.எஸ்.தமிழரசு பொறுப்பேற்பு
கோபி காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக சி.எஸ்.தமிழரசு பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் பணியிடம் நீண்டகாலமாக காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், கோவை குனியமுத்தூா் குற்றப் பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த வந்த சி.எஸ்.தமிழரசு கோபி காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, கோபி காவல் நிலைய ஆய்வாளராக சி.எஸ்.தமிழரசு சனிக்கிழமை பொறுப்பெற்றுக்கொண்டாா்.