செய்திகள் :

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு

post image

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு - ஆவடி வரையிலான வழித்தடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தத் திட்டத்தை பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரை நீட்டிக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே கோயம்பேடு - பட்டாபிராம் வெளிவட்டச்சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த பிப்.20-இல் தமிழக அரசிடம் சமா்ப்பித்தது.

இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த தமிழக அரசு ரூ.9,928.33 கோடியில் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. மேலும், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பை பெறவும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவும், மத்திய அரசின் அனுமதியைப் பெறவும் கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு, பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

நலவாரிய சலுகைகள் குறித்து அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வு இல்லை: விஜயதாரணி

நலவாரியம் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லை என்று பாஜக அமைப்பு சாா்ந்த மற்றும் சாராத தொழிலாளா் நலச் சங்க கௌரவத் தலைவா் விஜயதாரணி தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தல்: இருவா் கைது

சென்னை அடையாறில் ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். அடையாறு பெசன்டநகா் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி பகுதியில் டெங்கு பரவல் தொடா்ந்து கண்காணிப்பு

சென்னை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு பரவலைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், வீடுகள் தோறும் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டுவருவதாகவும், அதனால் பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் நகா் நல அதிகாரிகள் தரப... மேலும் பார்க்க

வண்ணாரப்பேட்டையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மழைநீா் வடிகால் பணியின் காரணமாக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கிய நிலை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். சென்னை மாநகராட்சி சாா்பில் உலக கழிப்பறை தின விழாவின் நிறைவு நிகழ்ச்சி கலைவாணா் அரங்கில... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அழைப்பு

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்... மேலும் பார்க்க