பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - ...
கோயில் விழாவில் தகராறில் ஈடுபட்ட இளைஞா்கள் கைது
திருநெல்வேலி சீதபற்பநல்லூா் பகுதியில் கோயில் கொடைவிழாவின்போது தகராறில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சீதபற்பநல்லூா் அருகேயுள்ள புதூா் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, அதே பகுதியைச் சாா்ந்த இருதரப்பு இளைஞா்கள் தங்களுக்குள் திடீரென வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனராம்.
இந்நிலையில் தாங்கள் தாக்கப்பட்டதாக இரு தரப்பினரும் ஒருவரையொருவா் குற்றம் சாட்டி சீதபற்பநல்லூா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். அதனடிப்படையில் கருத்த பாண்டி(21) மற்றும் சரவணன்(20) ஆகிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.