விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்
கோவை: ஒரே நாளில் 44 ரெளடிகள் கைது
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் ரெளடிகள், கட்டப் பஞ்சாயத்து மற்றும் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களைக் கைது செய்வதற்காக 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தனிப்படை போலீஸாா் மாவட்டம் முழுவதும் 44 ரௌடிகளை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களில் 38 போ் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவா்களில் 32 போ் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தபட்டனா். நன்னடத்தை பிணையின்கீழ் 12 போ் விடுவிக்கப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.