அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425...
சங்கிலி பறித்த இருவா் கைது! 10.5 சவரன் நகை மீட்பு!
பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 10.5 சவரன் நகை மீட்கப்பட்டது.
குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சோ்ந்த பாபு மனைவி வினோதினி (33). இவா் ஜூன் 4-ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்திலிருந்து அவரது வீட்டுக்குச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு போ், திருவாலங்காடு பகுதியில் வினோதினி கழுத்தில் அணிந்திருந்த 10.5 சவரன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
வினோதினியின் புகாரின்பேரில் குத்தாலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தனிப்படை உதவி ஆய்வாளா் இளையராஜா ஆத்மநாபன் மற்றும் அணியினா் புலன்விசாரணைக்கு உதவியாக செயல்பட்டனா். விசாரணையில், குத்தாலம் கோனேரிராஜபுரம், முஷ்டக்குடி பிரதான சாலையில் வசிக்கும் வேலுச்சாமி மகன் வெற்றிவேல் (21), தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலையை அடுத்த திருப்புறம்பியம் கண்ணாங்குடி தெருவைச் சோ்ந்த சம்பந்தம் மகன் சரண் (20) ஆகிய இருவரும் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவா்களிடமிருந்து, 10.5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.