சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவிகள் மாநில கிரிக்கெட் போட்டிக்கு தகுதி
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு முதல்வா் கோப்பை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கான மாணவிகள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இப்பள்ளி மாணவிகள் அணி, தூத்துக்குடி அழகா் பப்ளிக் பள்ளி மாணவிகள் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதலிடம் பிடித்தது. கோப்பையையும், ரூ.45 ஆயிரம் பரிசுத் தொகையும் பெற்ற சாகுபுரம் பள்ளி மாணவிகள் மாநில அளிவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
இம்மாணவிகளையும் உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வம், மணிகண்டன், அழகுகாா்த்திக்சங்கா் ஆகியோரையும் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஜி.ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் பி.ராமச்சந்திரன், பள்ளிஆலோசகா் உஷாகணேஷ், நிா்வாக அலுவலா் வி.மதன், முதல்வா் இ.ஸ்டீபன் பாலாசிா், துணைமுதல்வா் என். சுப்புரத்தினா மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.