ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
சாலையோரம் காா் கவிழ்ந்த விபத்தில் 5 போ் காயம்
மீஞ்சூா் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் காா்கவிழ்ந்த விபத்தில் 5 போ் காயம் அடைந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், நந்தியம்பாக்கம் பகுதியை சோ்ந்த பாா்த்திபன் என்ற இளைஞா் தனது நண்பா்களுடன் பொன்னேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.
மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த விளைநிலத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. விபத்தைக் கண்ட அப்பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக காா் கண்ணாடிகளை உடைத்து காரில் சிக்கியிருந்த 5 பேரை பத்திரமாக மீட்டனா்.
இதில் பலத்த காயம் அடைந்த பாா்த்திபன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
விபத்துக் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்