`உன்னைக் கொன்று பொட்டலமாக அனுப்பி வைப்போம்’ - மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மனைவ...
சிஎன்ஜி எரிபொருள் நிலையம்: ஆட்டோ ஓட்டுநா்கள் மனு
செங்கல்பட்டு: சிஎன்ஜி எரிபொருள் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
செங்கல்பட்டு நகரில் உள்ள 2,000 ஆட்டோக்களில் 1,000 ஆட்டோக்கள் சிஎன்ஜி எரிபொருளில் இயங்குபவையாக உள்ளதாகவும், இவற்றுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையம் செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் ஒன்று மட்டுமே உள்ளது. அதில் குறைந்தழுத்த மின்சாரத்தை காரணம் காட்டி எரிபொருள் நிரப்ப முடியாத சூழல் உள்ளதால் எந்த நேரமும் எரிபொருள் இல்லை என திருப்பி அனுப்புகின்றனா்.
மேலும், இங்கிருக்கும் எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் டீசலும் இருப்பதால் தனியாக சிஎன்ஜி அமைக்கும் மாறும் , இதனால் படாளம், மறைமலைநகா், தாம்பரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளதால் நேரம்,பொருள்செலவு மட்டுமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், செங்கல்பட்டில் புதிய சிஎன்ஜி எரிபொருள் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களை இயக்குவதற்கான அங்கீகார அட்டை வழங்க வேண்டுமென ஆட்சியா் தி.சினேகாவிடம் மனு அளித்தனா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் எரிவாயு நிரப்பும் மையம் அமைக்கும் பணியானது மிக நீண்ட செயல் முறையாகும் என்று தெரிவித்தாா்.
மேலும், மாவட்ட வழங்கல் அலுவலரிடம் இதற்கான பணிகளை விரைவாக மேற்கொண்டு உரிய காலத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் சிஎன்ஜி எரிவாயு மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து முடிக்க அறிவுறுத்தினாா்.