செய்திகள் :

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

post image

திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும், ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதா், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிா், இளநீா், மாவுப் பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

இதேபோல, முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மெளன குருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி: பழனி தம்பதியா் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாகதக் கூறி, 4 பேரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த பழனி தம்பதியா் மீது மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சின்னக்கலையம்பு... மேலும் பார்க்க

பழனிக்கு வந்த ராமா் ரத ஊா்வலம்

ராம நவமியை முன்னிட்டு, கேரளத்திலிருந்து புறப்பட்ட ராமா் ரத ஊா்வலம் திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு புதன்கிழமை வந்தது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், செருக்கோடு ஆஞ்சநேயா் ஆஷ்ரமத்தில் இருந்து தொடங்கிய... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி பக்தா் உயிரிழப்பு

பழனி, ஏப். 2: பழனி இடும்பன் குளத்தில் நீராடிய பக்தா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சோ்ந்த பக்தா்கள் சிலா் குழுவாக பழனிக்கு சுவாமி தர... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் இணை மானியத் தொகை

இஸ்லாமிய, கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்களுக்கு இணை மானியத் தொகையாக ரூ.40 லட்சத்தை பயனாளிகளிடம் ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை வழங்கினாா். இஸ்லாமிய மகளிா் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்கள்... மேலும் பார்க்க

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க