சீனாவில் கடுமையான நிலச்சரவு! நான்கு பேர் பலி; 8 பேர் மாயம்
வடக்கு சீனாவின் ஹீபேய் மாகாணத்தில் பெய்து கனமழை காரணமாக ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர். 8 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
லௌன்பிங் கௌண்டி கிராமத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த நான்கு நாள்களாக, சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், அங்கு வெள்ள எச்சரிக்கை மீட்புப் பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு வந்தன.
பெய்ஜிங்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மியூன் அணைக்கட்டில், அது கட்டப்பட்டு 60 ஆண்டுகளில் வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்துள்ளது. அபாய கட்டத்தை தாண்டி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆற்றங்கரையோரப் பகுதி மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்படுள்ளது.