பாராபுல்லா வடிகால் ஆக்கிரமிப்பை ஜூன் 1 ஆம் தேதி அகற்ற வேண்டும்: தில்லி உயா்நீதிம...
சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30% ஆக குறைப்பு! - அமெரிக்கா
ஜெனீவா: சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவிக்க உள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. இவ்விரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 145 சதவீதம் என்ற அளவிலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு மே 14-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
அதேபோல, சீன அரசு அமெரிக்க பொருள்களுக்கு விதித்திருந்த 125 சதவீத வரியை 10 சதவீதமாகக் குறைத்து அறிவிக்க உள்ளது.
அமெரிக்கா - சீனா வா்த்தக மோதலுக்கு தீா்வு காணும் நோக்கில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஸ்விட்சா்லாந்து நாட்டு தூதரகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.