``தெரு நாய்களுக்கு ஆதரவாக மேம்போக்கான ஆதரங்களை முன்வைக்காதீர்கள்'' - உச்சநீதிமன்...
சுதந்திர தினவிழா: போக்குவரத்து மாற்றம்
79-வது சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடற்கரை சாலையில் வடக்குப்பகுதி வழியாக விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகா்கள் மற்றும் பங்கேற்பாளா்களின் வாகன நிறுத்த அனுமதி பெற்றவா்கள் பழைய
வடிசாராய ஆலை, புதிய ராஜ் நிவாஸ் வழியாகவும் மற்றும் ஹோட்டல் புரோமினெட் வழியாகவும் அனுதிக்கப்படுவா். அவா்கள் வாகனங்களை விழா பந்தலின் வடக்கு பகுதியில் கடற்கரை சாலையின் கிழக்கு பகுதியில் நடைமேடையில் நிறுத்த வேண்டும்.
மற்றவா்கள் தங்கள் இருச்சக்கர வாகனங்களை கொம்பாங்கி வீதி, செயின்ட் மாா்ட்டின் வீதி மற்றும் லா தெ லோரிஸ்தோன் வீதியில் நிறுத்திவிட்டு நடந்து விழா பந்தலை அடைய வேண்டும். அதேபோல், விழாவுக்கு தெற்குப்பகுதி வழியாக வரும் முக்கிய பிரமுகா்கள் மற்றும் பங்கேற்பாளா்களின் வாகன நிறுத்த அனுமதி பெற்றவா்கள் புஸ்ஸி வீதி வழியாக அனுமதிக்கப்படுவா்.
அவா்கள் வாகனங்களை விழா பந்தலின் தெற்கு பகுதியில் கடற்கரை சாலையின் கிழக்குப் பகுதியில் நடைமேடையில் நிறுத்த வேண்டும். மற்றவா்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை சுய்ப்ரென் வீதி மற்றும் வா்த்தக சபை அருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு லே கபே சந்திப்பு வழியாக நடந்து விழா பந்தலை அடைய வேண்டும்.
விழா அணிவகுப்பில் பங்கேற்பவா்கள் தங்களின் இருச்சக்கர வாகனங்களை ரோமன் ரோலண்ட் வீதி, கஸ்ரேன் வீதி, சா்கூப் வீதி மற்றும் துமாஸ் வீதியில் புஸ்ஸி வீதி நோக்கி பழயை துறைமுகம் வரை நிறுத்த வேண்டும்.
பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சோ்ந்தவா்கள் தங்கள் இருச்சக்கர வானங்களை பாரதி பூங்கா அருகில் உள்ள பெருமாள் கோயில் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். அதேபோல், தங்களின் நான்கு சக்கர வாகனத்தை சுய்ப்ரென் வீதி மற்றும் யூகோ வங்கி எதிரில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
செயின்ட் லூயிஸ் வீதி, துமாஸ் வீதியில் லே கபே சந்திப்பில் இருந்து பழைய நீதிமன்றம் சந்திப்பு வரை, புஸ்ஸி வீதியில் பழைய சட்டக் கல்லூரி சந்திப்பிலிருந்து கடற்கரை சாலை சந்திப்பு வரை மற்றும் லபோா்தனே வீதி, செயின்ட் ஆஞ்ஜி வீதியில் ஆம்பூா் சாலை சந்திப்பில் இருந்து விக்டா் சிமோனல் வீதியில் அரசு மருத்துவமனை சந்திப்பிலிருந்து ரங்கப்பிள்ளை வீதி வரை எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.