`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட...
சுதந்திர தின விழா: மாவட்ட விளையாட்டு அரங்கில் அணிவகுப்பு ஒத்திகை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தருவையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
79ஆவது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தருவையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றுகிறாா்.
இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட காவல்துறையினா், தீயணைப்புத் துறையினா், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அணிவகுப்பு ஒத்திகையில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினா், 140-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள் என சுமாா் 250 போ் பங்கேற்றனா்.