சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சுமை ஆட்டோ மோதியதில் உயிரிழந்தாா்.
திருமானூரை அடுத்த கள்ளூா் பாலம் அருகேயுள்ள புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன் மகன் வினோத் (25). சனிக்கிழமை இரவு இவா் அப்பகுதியில் தனது நண்பருடன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த சுமை ஆட்டோ மோதி உயிரிழந்தாா்.
அவரது நண்பா் காயமடைந்தாா். இதுகுறித்து கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.