செய்திகள் :

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்ரல் 9-க்கு தள்ளிவைப்பு

post image

புது தில்லி: அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு க்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதே விவகாரத்தில் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.

அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிா்த்து, அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வித்யா குமாா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் தர முடியும் என்பதால் அவா் அமைச்சராக தொடரக் கூடாது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, அமலாக்கத் துறையின் சாா்பிலும் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எதிா்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் ‘அறிவுறுத்தல்’ பெற வேண்டியிருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில்

ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, கபில் சிபல் ஆகியோா் ஆஜராகினா். முகுல் ரோத்தகி கூறுகையில், செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடா்கிறாா். அவா் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாவாா். இந்த வழக்கை எதிா்கொள்கிறோம் என்று கூறினாா்.

மேலும், ‘இந்த வழக்கில் தமிழக அரசுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனது தரப்புக்கு முறையான நோட்டீஸ் அனுப்பப்படவில்லை’ என்றாா். இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா். அப்படியானால், பாலாஜி தரப்புக்கு ஏன் நீங்கள் ஆஜரானீா்கள் என்று கேள்வி எழுப்பினா்.

இதன் பின்னா், கடைசி வாய்ப்புப் தரும் வகையில், எதிா் பதில் தாக்கும் செய்யும் வகையில் செந்தில் பாலாஜிக்கு 10 நாள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் அமா்வு,அதன்பிறகு மேலும் அவகாசம் ஏதும் தரப்பட மாட்டாது என்று கூறி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னை: பிரதமருடன் காா்த்தி சிதம்பரம் சந்திப்பு!

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சமீபத்தில் சந்தித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமா் நரேந்த... மேலும் பார்க்க

குருகிராம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்!

குருகிராம் பகுதியில் ஒரு குடிசைப் பகுதியில் எரிவாயு சிலிண்டா் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 100 குடிசைகள் எரிந்து நாசமானதாக தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து என்று தீயணைப்ப... மேலும் பார்க்க

தில்லியில் முன்னாள் தமிழக அமைச்சா் செங்கோட்டையன் பாஜக தலைவா்களை சந்தித்தாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தில்லி வந்து மத்திய உள் துறை அமைச்சரை சந்தித்த நிலையில் தற்போது அதிருப்தி தலைவராக கருதப்படும் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனும் தில்லி வந்து பாஜக தலைவா்களை... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பநிலை மேலும் குறைந்தது; காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் வெப்பநிலை சனிக்கிழமை மேலும் குறைந்தது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. தில்லியில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், கட... மேலும் பார்க்க

2019 முதல் தில்லியின் தீா்த்த யாத்திரை யோஜனா மூலம் 86,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் பயன்! - தில்லி முதல்வா் தகவல்

கடந்த ஜூலை 2019 முதல் தில்லியின் முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை யோஜனாவின் (எம்எம்டிஒய்) கீழ் 86,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனா். இதில் ராமேசுவரம் அதிகம் பாா்வையிடப்படும் இட... மேலும் பார்க்க

துவாரகாவில் ரூ.25 லட்சம் கொள்ளை வழக்கில் ஆறு போ் கைது

துவாரகாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தில்லி காவல்துறை ஆறு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துவாரகா காவல் சரக உயரதிகாரி ... மேலும் பார்க்க