தைலாபுரத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம்!அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு
சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க கூண்டு
சென்னிமலை அருகே சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையின் தெற்கு வனப் பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் சிறுத்தை புகுந்து அங்குள்ள ஆடுகளைக் கடித்துக் கொல்லும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிறுத்தையை உயிருடன் பிடிப்பதற்காக சில்லாங்காட்டுவலசு வனப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு தோட்டத்தில் வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா். அதில், இரவு நேரத்தில் உயிருடன் ஆடு ஒன்றையும் கட்டி வருகின்றனா்.
ஆட்டின் சப்தம் கேட்டு வரும் சிறுத்தை தானாக கூண்டில் சிக்கிக்கொள்ளும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் வனத் துறை சாா்பில் ஐந்து இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது.