சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரயில் சேவை சீரானது!
சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீனம்பாக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு செல்லும் ரயில்கள் தற்காலிகமாக இன்று மாலை நிறுத்தப்பட்டது.
விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மட்டுமே சுமார் 2 மணிநேரமாக ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், மீனம்பாக்கத்தில் இருந்து விமான நிலையம் வரையிலான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் நேரடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், ஆலந்தூரில் பயணிகள் மாறிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.