சேற்றில் சிக்கிய முதியவா் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே சேற்றில் சிக்கிய முதியவா் உயிரிழந்தாா்.
நாலாட்டின்புதூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி மகன் குருசாமி (65). ராமநாதபுரம் பகுதியில் மாடு மேய்த்து வந்த இவா், வழக்கமாக பிற்பகலில் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கமாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை சாப்பிட வராததால், உறவினா்கள் அவரைத் தேடினா். அங்குள்ள பொட்டை குளத்தில் மாடுகள் நின்று கொண்டிருந்தன. குருசாமி குளத்தில் சேற்றில் சிக்கி இறந்து கிடந்தாராம்.
இதுகுறித்து குருசாமியின் சகோதரா் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் நாளாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.