ஜம்மு எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவியவர் சுட்டுக் கொலை!
ஜம்மு எல்லையில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொல்லப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறினர்.
ஜம்மு எல்லையில், ஏப்ரல் 4 ஆம் தேதி நள்ளிரவில் எல்லை புறக்காவல் நிலையமான அப்துலியனில் ஒருவர் ஊடுருவியதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறினார்.
ஊடுருவிய நபரை தடுக்க முயன்ற அதிகாரியின் ஆணையை ஏற்க மறுத்து, தொடர்ந்து ஊடுருவ முயற்சித்ததால், பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு, ஊடுருவியரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
அத்துமீறி, எல்லைக்குள் ஊடுருவியவரின் அடையாளம் மற்றும் ஊடுருவியதன் நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர். மேலும், அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:பாம்பன் பாலம் திறப்பு: பிரதமரின் நாளைய நிகழ்ச்சி நிரல்!