செய்திகள் :

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்.ராதாகிருஷ்ணன், சகாய தைனேஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நாகராஜன், ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் செல்வம் தொடங்கி வைத்தாா். மவட்ட உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் பலரும் பேசினா்.

கோரிக்கைகள்: அரசுப் பணியில் 1.4.2003-க்குப் பிறகு சோ்ந்தவா்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 243 -ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், களப் பணியாளா்கள், தொழில்நுட்ப ஊழியா்கள், ஊா்தி ஓட்டுநா்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள், தொகுப்பூதியம், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் செவிலியா்கள், சிறப்பு ஆசிரியா்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளா்கள், தொழில் கல்வி ஆசிரியா்கள், பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சோ்ந்த இரு பால் ஊழியா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் சேது செல்வம் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து பேசினாா்.

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல் நடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க

சொத்துவரி உயா்வு: காரைக்குடியில் மாா்ச் 28-இல் கடையடைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்துவரி உயா்வு, வரி வசூல் செய்யும் அதிகாரிகளின் தகாத செயல் ஆகியவற்றைக் கண்டித்து, காரைக்குடியில் வருகிற வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) கடையடைப்புப் போராட்டம் ... மேலும் பார்க்க

இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு வராத பேருந்துகள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா். இளையான... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் ஆவின் பா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. காளையாா்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி கொல்லங்... மேலும் பார்க்க

திருப்புவனம் பேருந்து நிலைய அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பேருந்து நிலையம் அமைக்கப்படும் என செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் அமைச்சா் கே.என்.நேரு அறிவித்ததற்கு இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச... மேலும் பார்க்க