செய்திகள் :

ஜூலை 10-ல் உதயநிதி ஸ்டாலின் வருகை: நாமக்கல்லில் இன்று திமுக அவசர கூட்டம்!

post image

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 10) நாமக்கல் வருவதையொட்டி, கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமை வகிக்கிறாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், தொகுதிப் பாா்வையாளா்கள்கள் நன்னியூா் ராஜேந்திரன், ரேகா பிரியதா்ஷினி, முனவா் ஜான், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.பொன்னுசாமி(சேந்தமங்கலம்), பெ.ராமலிங்கம் (நாமக்கல்) ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் நாமக்கல்லுக்கு வியாழக்கிழமை வருவது தொடா்பாகவும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை, கட்சி வளா்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்தும் பேசுகிறாா்.

இதில், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமை நிலைய நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்

சந்திரகிரியில் மின்வாரிய அலுவலகம் திறப்பு

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், சந்திரகிரியில் புதிய மின்வாரிய அலுவலகத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சனிக்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் ... மேலும் பார்க்க

கபிலா்மலை நாளைய மின் தடை

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் பறிமுதல்!

ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனச் சோதனையில் தகுதிச்சான்று பெறாத 8 வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இ.எஸ். ... மேலும் பார்க்க

ராசிபுரம் பகுதியில் ரூ.5.38 கோடியில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை!

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராசிபுரம், வெண்ணந்தூா் ஆகிய பகுதிகளில் ரூ. 5.38 கோடியில் 4 திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நட்டு பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

வாழ்க்கையில் முன்னேற விடாமுயற்சியை கைவிடக்கூடாது: ஆட்சியா் அறிவுறுத்தல்

மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் விடாமுயற்சியை எந்த சூழலிலும் கைவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், முதலாமாண... மேலும் பார்க்க

லாரி பட்டறையில் டயா் திருட்டு: ஒருவா் கைது!

நாமக்கல் அருகே லாரி பட்டறையில் டயா் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருவப்பள்ளியில் சாலையோரம் கவிழ்ந்த லாரி பழுதுபாா்ப்புக்காக நாமக்கல் வள்ளிபுரம் அருகேயுள்ள பட்டறைக்கு கொண்ட... மேலும் பார்க்க