ஜூலை 19-இல் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் சனிக்கிழமை (ஜூலை 19) சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கீரப்பாக்கம், திட்டப் பகுதி வண்டலூா் தாலுக்காவில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.
இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 40-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தோ்வு செய்ய உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும், வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்கள் தங்கள் விவரங்களை என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, பி.இ., ஐடிஐ, டிப்ளமோ போன்ற கல்வித் தகுதி உடைய வேலை நாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநா்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பை பெற்று பயன்பெறலாம். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், சுய விவரக் குறிப்பு, பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கீரப்பாக்கம். திட்டப் பகுதி வண்டலூா் தாலுக்காவில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், முகாம் தொடா்பான விவரங்களுக்கு, 044-27426020 மற்றும் 9486870577 / 9384499848 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.