செய்திகள் :

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கான எதிர்ப்பை திமுக அரசு பதிவு செய்யவில்லை: எல்.முருகன்

post image

புதுச்சேரி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாத திமுக அரசு, மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் எதிர்த்தது எனவும் டங்ஸ்டன் பிரச்னையில் திமுக 'நாடகம்' நடத்துகிறது என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் அவர் செய்தியாளா்களுடன் பேசுகையில், மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைய அந்த பகுதி கிராம மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையில் அந்த பகுதியை சோ்ந்த விவசாயிகள் தில்லி சென்று, மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது டங்ஸ்டன் சுரங்கத்தால் அந்த பகுதியில் ஏற்படக்கூடிய விவசாய பாதிப்பு மற்றும் இதர பிற பாதிப்புகளை எடுத்துக் கூறினர்.

இதையடுத்து பிரதமா் மோடியுடன் ஆலோசித்து மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதற்காக மதுரை மேலூா் பகுதி மக்கள் சாா்பிலும், தமிழக மக்கள் சாா்பிலும் பிரதமா் மோடிக்கும், மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மிஸ் பண்ணிடாதீங்க... 4576 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

எதிர்ப்பை பதிவு செய்யவில்லை

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சுரங்கம் அமைப்பதற்கான நடைமுறை பணிகள் நடைபெற்று வருகிறது. 2023-ஆம் ஆண்டு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டது. ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் இந்த திட்டத்துக்கான எந்தவிதமான எதிா்ப்பை திமுக அரசு பதிவு செய்யவில்லை.

மேலும் மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் எதிர்த்தது எனவும் டங்ஸ்டன் பிரச்னையில் திமுக 'நாடகம்' நடத்துகிறது என தெரிவித்தார்.

டங்ஸ்டன் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மக்கள் பக்கமே மத்திய அரசு நிற்கும். விரைவில் புதுதில்லியில் உலக திருக்குறள் மாநாடு நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்படும் என முருகன் கூறினார்.

இளம் தம்பதி சுட்டுக்கொலை! கொலையாளி தப்பியோட்டம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் கணவன் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கொலையாளி தப்பியோடியுள்ளார்.ஜெய்பூரின் சங்கனெர் சதார் பகுதியிலுள்ள சாந்தி விகார் காலனியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 26), இவர் தனது மனைவி ... மேலும் பார்க்க

உரிமையாளர் மர்ம மரணம்! உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்!

ருமேனியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளரின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளன.ருமேனியாவைச் சேர்ந்த அட்ரியானா நியாகோ (வயது 34) என்ற பெண் தனது வீட்டில் இரண்டு பக் வகை நாய்... மேலும் பார்க்க

வளர்ப்புப் பூனையால் வேலையை இழந்த பெண்!

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் வளர்ப்புப் பூனையின் செயலினால் பெண் ஒருவர் தனது வேலையை இழந்துள்ளார்.சீனாவின் சோங்கிங் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் இந்த மாதம் துவக்கத்தில் அவர் பணிப்புரியும் நி... மேலும் பார்க்க

7 ஆம் வகுப்பு மாணவன் பலி!ஆசிரியர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ஆசிரியர் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ளான்.சோனிட்பூர் மாவட்டத்தின் சிராஜுலி பகுதிலுள்ள தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் கடந்த ஜன.22 அன்று அமன் குமார் என்ற ... மேலும் பார்க்க

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் க... மேலும் பார்க்க

புலி தாக்கியதில் பெண் தொழிலாளி பலி!

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் புலி தாக்கியதில் காபி தோட்டத்தின் பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.வயநாட்டின் மனந்தாவடி பகுதியிலுள்ள தனியார் காபி தோட்டத்தில் அங்கு பணிப்புரியும் ராதா (வயது 45) என்ற... மேலும் பார்க்க