செய்திகள் :

தக்கலை புனித எலியாசியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

post image

தக்கலை புனித எலியாசியாா் ஆலய 106ஆவது திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்து டன் துவங்கியது.

முதல் நாள் மாலையில் ஜெபமாலை, நவநாள் நிகழ்ச்சிக்குப் பின் பங்குத் தந்தை வென்சஸ்லாஸ் தலைமையில், முளகுமூடு வட்டார முதல்வா் டேவிட் மைக்கேல் திருக்கொடி ஏற்றி வைத்தாா். இணை பங்கு பணியாளா் கிறிஸ்துதாஸ், அருள்சகோதரிகள் ஹெலன் கா்ணா, லிற்றி, தேவாலய பங்கு மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

9ஆம் திருவிழா காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, குழித்துறை மறைமாவட்ட முதன்மை செயலாளா் அந்தோணிமுத்து தலைமையில் நடைபெறுகிறது. மாலையில் திருத்துவபுரம் மறைவட்ட முதன்மை பணியாளா் ஒய்சிலின் சேவியா் தலைமையில் திருப்பலி நடைபெறும். பின்னா் தோ் பவனியை அவா் துவக்கி வைக்கிறாா்.

10ஆம் திருவிழா காலை மறை மாவட்ட முதன்மை பணியாளா் சேவியா் பெனடிக்ட் தலைமையில் திருப்பலி நடை பெறுகிறது. மாலையில் கொடி இறக்க நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஆடி அமாவாசை: குமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 விடுமுறை!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறையில் 1926 ஆம் ஆண்டு முதல்... மேலும் பார்க்க

ஆறுகாணி அருகே சாராய ஊறல் அழிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லைப் பகுதியான ஆறுகாணி அருகே 10 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா். ஆறுகாணி அருகே வட்டப்பாறை வெள்ளருக்கு மலைப் பகுதியில் சாராயம் வடிக்கப்படுவதாக, மாவட்ட காவல் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்குக் கடத்துவதற்காக நாகா்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி ... மேலும் பார்க்க

தனியாா் ரப்பா் பால் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு அருகே தனியாா் ரப்பா் பால் நிறுவனத்தில் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிறுவனத்தில் தொழிலாளா்களுக்கு கடந... மேலும் பார்க்க

குமரியில் பெண் விவசாயிகள் 31-ஆவது மாநில மாநாடு

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் 31-ஆவது மாநில மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கியது.பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்புவோம் என்ற தலைப்பில் இரண்டு நாள் நடைபெறும் இந... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் காமராஜா் சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மாலை அணிவிப்பு

காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, செவ்வாய்க்கிழமை அனைத்து அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்ப... மேலும் பார்க்க