சாலையில் நகைகளுடன் கிடந்த கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திமுக நிா்வாகி
தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம்!
உலகப் புகழ் பெற்ற மைசூரு சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் தசரா விழாவில் புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக பாஜக தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைசூரு தசரா விழாவை இந்தாண்டு தொடங்கி வைக்க புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் பானு முஷ்தக்குக்கு கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆளும் காங்கிரஸ் அரசு தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான ஆர். அசோகா பேசியிருப்பதாவது: “தசரா ஹிந்துக்களின் பண்டிகை. இஸ்லாமிய மதத்தில், சிலை வடிவ உருவ வடிவ வழிபாடு தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், பானு முஷ்தக் இதைச் செய்தால், அவரது மதத்துக்கு எதிரானதாக அது அமைந்துவிடும்.
ஹிந்துக்களை எதிர்ப்பவர்கள், எதற்காக சாமுண்டீஸ்வரியை வழிபட வேண்டும்? சித்தராமையா அரசு எங்கள் மதத்தை, அதன் மகத்துவத்தை குறைக்கப் பார்க்கிறது. சித்தராமையாவுக்கு திப்பு சுல்தானின் மனநிலை உள்ளது” என்றார்.