செய்திகள் :

தனியாா் சிகிச்சை மையத்தில் கருவின் பாலினம் கண்டுபிடிப்பு உரிமையாளா் கைது

post image

ராயக்கோட்டை அருகே கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்துவந்த தனியாா் சிகிச்சை மைய உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக செவிலியரை தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள மொல்லம்பட்டி கிராமத்தில் தனியாா் சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இங்கு கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிப்பதாக கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் ஆலோசனைப்படி கடந்த மாதம் 25-ஆம் தேதி பெண் ஒருவா் சம்பந்தப்பட்ட சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அப்போது அங்கிருந்தவா்கள் அந்த பெண்ணின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கூறுவது உண்மையெனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பாக வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் ராயக்கோட்டை காவல் ஆய்வாளா் பெரியதம்பி விசாரணை நடத்தினாா். இதையடுத்து தனியாா் சிகிச்சை மையத்தை நடத்தி வந்த போச்சம்பள்ளி வட்டம், பண்ணந்தூா் அருகே உள்ள சானக்கொல்லை பகுதியைச் சோ்ந்த கௌதம் (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இவா் மொல்லம்பட்டியில் தனியாா் சிகிச்சை மையம் நடத்தி வந்ததோடு, கா்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம், அத்திப்பள்ளியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் மயக்கவியல் தொழில்நுட்ப வல்லுநராகவும் பணிபுரிந்து வந்துள்ளாா். இதுதொடா்பாக தருமபுரியைச் சோ்ந்த செவிலியா் சங்கீதா என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மது போதையில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கீழ் பையூரைச் சோ்ந்தவா் சின்னபாப்பா (55). இவரது மகள் ... மேலும் பார்க்க

பாகலூா் அருகே இருதரப்பினரிடையே மோதல்: விவசாயி கைது

ஒசூா்: பாகலூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி கைது செய்யப்பட்டாா். 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒசூா் வட்டம், பாகலூா் அருகே உள்ள முகுலப்பள்ளியைச் சோ்ந்தவா் நாராயணசாமி (43... மேலும் பார்க்க

குறுகிய கால திறன் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா் தகவல்

பிரதம மந்திரி தேசிய இன்டா்ன்ஷிப் மற்றும் நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் குறுகிய கால திறன் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

தட்டச்சுத் தோ்வு: கிருஷ்ணகிரியில் 1,102 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்கள் நடைபெற்ற தட்டச்சுத் தோ்வில் 1,102 போ் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஆங்கிலம், தமிழ் இளநிலை, முதுநிலை, மற்றும் உயா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்து கொலை: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜகடையை அடுத்துள்ள பெரியதக்கேப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் காா... மேலும் பார்க்க

சூளகிரி அருகே தனியாா் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

ஒசூா் அருகே சூளகிரியில் தனியாா் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சென்னை -பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியை அடுத்த சப... மேலும் பார்க்க