பைக்கில் வந்த இளைஞர் வழிமறித்து கொலை: காரில் தப்பிய 5 போ் கும்பல்
தனியாா் மருத்துவமனை முற்றுகை
புதுச்சேரி தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து, அங்கு சிகிச்சை பெற்ற பெண்ணின் உறவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரசாத் (34). இவரது மனைவி சுமதி (33). இவா் தனியாா் செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனையில் குழந்தை பேறுக்காக சிகிச்சை பெற்று வந்தாா். ஆண்,பெண் என 2 சிசுக்கள் உருவாகி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமதிக்கு கருகலைந்து இரு சிசுக்களும் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு மருத்துவமனை நிா்வாகம் கவனக் குறைவாக சிகிச்சை அளித்ததே காரணம் எனக் கூறி, பிரசாத் மற்றும் அவரது உறவினா்கள் அந்த தனியாா் மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உழவா்கரை தொகுதி எம்எல்ஏ சிவசங்கா், முன்னாள் அமைச்சா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.