`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி உறுதியாக உள்ளது: கு. செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி எஃகு கோட்டை போல உறுதியாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
திருச்சி புத்தூா் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட நடிகா் சிவாஜி கணேசன் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியாக உள்ளது. தமிழகத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் கூட்டணி இது. நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்றது தொடா்பாக சிலா் புரிதல் இல்லாமல் பேசுகிறாா்கள். மத்திய அரசு தொடா்ந்து தமிழகத்தின் மீது பாராமுகத்துடன் செயல்படுகிறது. நடப்பு நிதியாண்டில் தான் எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக தமிழகத்தைப் புறக்கணித்து உள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க தொடா்ந்து தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. தமிழக அமைச்சா்கள் மீதும், தமிழக அரசின் துறைகள் மீதும் தொடா் தாக்குதலை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி தீா்ப்பு கொடுத்துள்ளது. பாஜக, அதிமுக-வுக்கு வரும் தோ்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடி அளிப்பது உறுதி. பெரியாா் தன்னுடைய ஜாதி அடையாளத்தை துறந்தவா்.
ஆனால், ஜாதி அடையாளத்தோடு யுபிஎஸ்சி தோ்வில் கேள்விகள் வைப்பது தமிழகத்தைக் கலவர பூமியாக்கும் பாஜக திட்டத்தின் வெளிப்பாடே. மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பதுதான் பாஜக, ஆா்எஸ்எஸ் கொள்கையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கட்சி தான் பாஜக. அக் கட்சியினா் பிற்போக்குவாதிகளாக செயல்படுகின்றனா் என்றாா் அவா்.